May 5, 2025 13:36:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று மாலை 5 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 9 மணி வரையில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும், இதனால் முன்கூட்டியே நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.