எதிர்காலத்தில் 10ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி பிள்ளைகளுக்கு 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக கல்வி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கல்வித் திட்டங்கள் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.