பிலிபைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மூத்தோருக்கான “நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்” (National Masters & Seniors Athletics) போட்டியில் இலங்கையின் முல்லைதீவு முள்ளியவளையை சேர்ந்த 75 வயதுடைய அகிலத்திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
1500 மீட்டர் ஓட்டம் மற்றும் 5000 மீட்டர் விரைவு நடை போட்டிகளில் இவர் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.