நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் தங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதற்கு பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. எனினும், குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதாக சேற்றின் மீது கை வைக்க வேண்டுமா? அதனால், சேறு பூசுபவர்கள் கைகளில் சேறு உள்ளதை கூற விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருடைய உரிமையை அழிக்கப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் நாட்டு மக்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய செயற்பட்டிருக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். .