
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது.
இன்று மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன எதிர்த்து வாக்களித்தன.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 13ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.