
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்பதுடன், அரிசி இருப்பையும் உறுதிப்படுத்த முடியுமாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனியார் துறையினர் வசம் காணப்படும் சீனித் தொகையை அரசாங்கத்தின் ஊடாக, சதொச பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.