January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கைக்கழுவும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி

உலகம் முழுவதும் மிகநம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக நாமங்களில் ஒன்றான “டெட்டோல்” 2023 ஒக்டோபர் 15ம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச கைக்கழுவும் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான சித்திரப் போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

நற் சுகாதார பழக்க வழக்கங்களுக்கு எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

“கிருமிகள் இல்லாத நாளை – ஆரோக்கிய நாடு” என்னும் தொனிப்பொருளின் கீழ் “கிருமிகள் இல்லாதநாடு” இனை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சித்திரப் போட்டியில் நாடு முழுவதுமுள்ள சிறார்களுக்கு தூய்மையான இலங்கை தொடர்பாக தமது படைப்பாற்றல்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

இப்போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த  Reckitt Benckiser  நிறுவனத்தின்   Dettol  சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் செல்வி.லிலானி ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில், “சிறுபராயம் முதலே நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது முக்கியம். சிறுவர்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பாக வழிகாட்ட வேண்டும். கைகளை கழுவுவது அடிப்படை தூய்மைக்கான பழக்கம் என்பதை பிள்ளைகள் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாம் இந்த போட்டியின் தொனிப்பொருளை தேர்வு செய்தோம். எமது நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் உள்ள வர்த்தக நாமம் என்ற வகையில், ஆரோக்கியமான நாட்டுக்காக தமது பங்களிப்பை சிறுவர்கள் எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை நாம் எதிர்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை எமது பொறுப்பாக கண்டோம்” என குறிப்பிட்டார்.

7 வயது மற்றும் 7 வயதின் கீழ், 8-10, 11-13 மற்றும் 14-16 ஆகிய நான்கு வயது பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளுக்கு கிருமிகள் இல்லாத நாடு என்ற தொனிப்பொருளில் ஏராளமான படைப்புகள் கிடைக்கப் பெற்றன. சுயாதீன நடுவர் குழு ஊடாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

7 வயதிற்குட்பட்ட பிரிவில் அலவ்வையை சேர்ந்த ஹசதி அகித்மா,8-10 வயதிற்குட்பட்ட பிரிவில் வெல்லம்பிட்டியை சேர்ந்த செனுத் சனுஜ,11-13 வயதிற்குட்பட்ட பிரிவில் குருவிட்டயைச் சேர்ந்த கே.ஜி.ஹன்சி எரந்திக்கா மற்றும் 14-16 வயதிற்குட்பட்ட பிரிவில் இறம்புக்கனையைச் சேர்ந்த தனின்து மனோத்ய ஆகியோர் முதல் இடங்களை பெற்றுக் கொண்டனர்.