2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதியினால் எதிர்வரும் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்க்க அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெர்முணவின் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் இல்லை என்றால் அதனை தோற்கடிப்போம் என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை கட்சியின் செயலாளர் சாகர காரியவசமும் ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தற்போதைய நிலைமையில் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அரசாங்கத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.