February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு புறக்கோட்டையில் தீ!

கொழும்பு புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெரு பகுதியில் கட்டிடமொன்றில் தீ ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கட்டடத்திற்குள் சிக்கியிருந்த 16 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.