File Photo
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷி யான் 6’ புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து இந்தக் கப்பல் புறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ‘ஷி யான் 6’ கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலின் வருகை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததுடன், இதற்கு இலங்கை அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பும் வெளியிட்டு வந்தது.
எனினும், இலங்கை பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.
இதன்படி, கப்பல் 3 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.