January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது!

File Photo

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 8 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்கள் பயணித்த நான்கு மீன்பிடி படகுகளும் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாங்கள் பயணித்த படகுகள் காற்றின் வேகத்தால் இந்திய கடற்பரப்புக்குள் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது குறித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கைதான மீனவர்கள் தங்கக் கடத்தல் உள்ளிட்ட வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.