7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை அறவிடாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானத்திற்கு திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வீசா கட்டணம் அறவிடப்படாது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.