ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, கட்சியுடன் செயற்பாட்டில் இல்லாத ஏ.எச.எம்.பெளசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடிவேல் சுரேஷ் எம்.பியை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள அரவிந்த குமாரின் எம்.பி பதவியை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் அந்தக் கட்சியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.