May 25, 2025 8:40:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தற்போது பெறுபேறுகளை கணனியில் பதிவேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.