
சுகாதார அமைச்சுப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு சுற்றாடல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த ரமேஷ் பத்திரனவுக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்.