May 24, 2025 19:55:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை?

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு ஆராயப்பட்டுள்ளதுது.

மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க துபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக தெரிவவிக்கப்படுகின்றது.

இதன்படி குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் கொழும்பு – இராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமாரிக்கு இடையே கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நாகப்பட்டிணம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.