February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளாந்தம் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்ய முடிவு!

விலை சூத்திரத்திற்கமைய தற்போது மாதாந்தம் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விலை மறுசீரமைப்பை, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எரிசக்தி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது இயங்கி வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.