கொழும்பின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை முதல் 15 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதான நீர்க் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாகவும், இந்தக் காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்க்க நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நீர் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.