February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டயனா கமகே மருத்துவமனையில்: குற்றச்சாட்டை நிராகரிக்கும் ஐமச!

தன்னை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் தன்னுடன் வாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது தன்னை எம்.பியொருவர் தாக்கியதாகவும் அவர் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் நேற்று இரவு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் அவர், வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே டயனா கமகே தாக்க முயன்றதாகவும், அவர் தமது உறுப்பினர்களிடம் அநாகரிமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.