January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்!

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான சேவை உள்ளிட்ட சில ரயில் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் 1.40 மணிக்கு காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்சை வரை பயணித்த யாழ்தேவி ரயில் இனி காலை 10 மணிக்கு காங்கசந்துறை நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதேவேளை, சனிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசன்துறை வரை பயணிக்கும் ரயில் சேவை நேரம் காலை 5.30 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரை காலை 5.30 க்கு செல்லும் தினசரி ரயில் சேவை நேரம் காலை 5.25 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக குருநாகலில் இருந்து காலை 8.55 க்கு மஹவ சந்தி வரை செல்லும் தினசரி ரயில் சேவை நேரம் காலை 9.15 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.