இலங்கையின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார்.
பாரம்பரிய நடன கலைஞரான ரஜினி செல்வநாயகம் வெள்ளிக்கிழமை இரவு, தனது 71ஆவது வயதில் காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் இலங்கை நடனக் கலையில் தனித்துவமானவர் என்பதுடன், அவர் கலாசூரி மற்றும் கலா கீர்த்தி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
ரஜினி செல்வநாயகம் 1975 ஆம் ஆண்டில், “சாமர கலா நிகேதனயா” எனும் பெயரில் நடனப்பள்ளியை ஆரம்பித்தார். இது நடனக் கலையின் மூலம் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.