January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் கட்டணம் மேலும் அதிகரிப்பு!

Electricity Power Common Image

ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணங்களை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண மறுசீரமைப்பை அனுமதித்துள்ளது.

இதன்படி 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் கட்டணம் 12 ரூபா ஆகும்.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபா ஆகும்.

61 முதல் 90 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாகவும், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1000 ரூபாவில் இருந்து 1180 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..

மேலும், 121 முதல்180 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1,500 ரூபாவில் இருந்து 1,770 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் நிலையான கட்டணம் 2,000 ரூபாவில் இருந்து 2,360 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..