
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியில் எஞ்சலோ மெத்தியூஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக வீரராக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அடுத்துவரும் போட்டிகளில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அணியில் மாற்றங்களை மேற்கொள்ளவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி விரைவில் எஞ்சலோ மெத்தியூஸ் இந்தியா நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.