May 6, 2025 23:29:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – நாகை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பபட்டுள்ளது.

ஒக்டோபர் 20ஆம் திகதியுடன் இந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்படும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது,

முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23ஆம் திகதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.