May 24, 2025 11:07:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயகலா மகேஸ்வரன் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018 ஜுன் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக சிங்கள அமைப்புகள் சில சீஐடியில் முறைப்பாடு செய்தை தொடர்ந்து ஒக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விஜயகலா மகேஸ்வரனை குறித்த வழக்கில் இருந்து நீதவான் இன்று விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.