தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைமையை மாற்றல், ஊடக வழிகாட்டுதல்களை தயாரித்தல், அரசியல் கட்சிகளின் பதிவைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான பரிந்துரைகளையும் குறித்த ஆணைக்குழு முன்வைக்க வேண்டும்.
பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை ஆணைக்குழுவில் சுந்தரம் அருமைநாயகம், சேனாநாயக்க அலிசென்ட்ரலாகே, ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர, நவீன் சேனாரத்ன, மொஹமட் சலீம், சாகரிக்கா தெல்கொட, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் தீபானி சமந்த ரொட்ரிகோ ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த ஆணைக்குழு, தற்போதுள்ள அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் ஆய்வு செய்து, திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும்.