விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘லியோ’ திரைப்படம் 19ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அந்தத் திரைப்படத்தை எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கையில் திரையிட வேண்டாம் என்று கோரி, விஜய்க்கு இலங்கையில் இருந்து தமிழ்க் கட்சிகளினால் அனுப்பப்பட்டதை போன்ற கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளினால் ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், அதன்போது அந்தத் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று கோருவதை போன்றே அந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தக் கடிதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தமிழ்க் கட்சிகள் கூறியுள்ளன.
தங்களுடையதை போன்று போலியான கையெழுத்தை பயன்படுத்தி அந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கடிதமொன்றை நாங்கள் யாரும் அனுப்பவில்லை என்றும் தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம்