January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி தெற்கு லொபனானில் பணியாற்றும் இலங்கைகயர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது விபரங்களை 70386754 என்ற முதன்மை செயலாளர் சனத் பாலசூரியவின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது 71960810 என்ற காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்கவின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp ஊடாக பெற்றிட இந்த இணைப்பை அழுத்துங்கள் –https://whatsapp.com/channel/0029VaAk8rU8F2pAAyBV3s0z