
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
நசீர் அஹமட் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நிலையில், அவரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. இதற்கு எதிராக நசீர் அஹமட் உயர்நீதிமன்றத்தை நாடிய போதும், அவரின் உறுப்புரிமையை இரத்தானதை உயர்நீதிமன்றம் சரியென தீர்ப்பளித்தது.
இதன்படி அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போனதால், அந்த ஆசனத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.