இம்முறை நடைபெற்ற 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,888 நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.
இந்தப் பரீட்சை நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் அதன் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பரீட்சைகள் திணைக்களம், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறு வெளியாகும் வரையில் வினாத்தாள்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.