January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில் பெறுபேறு வெளியாகும் தினம் தொடர்பில் வெளியான தகவல்!

2023ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றது.
இதில் நாடு பூராகவும் 337,956 மாணவர்கள் தோற்றினர்.

இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், ஒன்றரை மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp ஊடாக பெற்றிட இந்த இணைப்பை அழுத்துங்கள் –https://whatsapp.com/channel/0029VaAk8rU8F2pAAyBV3s0z