அரச பாடசாலைகளுக்கான தவணை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை காலம் தொடர்பான திருத்தப்பட்ட கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2023 ஜனவரி மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால், முன்னர் அறிவிக்கப்பட்ட பாடசாலை நாட்கள் தொடர்பான கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனை தொடர்ந்து 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை மூன்றாம் தவணை முதற்கட்டம் நடவடிக்கைகள் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 22ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 31 வரையயில் விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன்,
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 01 தொடக்கம் 16ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும், பின்னர் டிசம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.