
எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.