
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நசீர் அஹமட் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நிலையில், அவரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. இதற்கு எதிராக நசீர் அஹமட் உயர்நீதிமன்றத்தை நாடிய போதும், அவரின் உறுப்புரிமையை இரத்தானதை உயர்நீதிமன்றம் சரியென தீர்ப்பளித்தது.
இதன்படி அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போனதால், அந்த ஆசனத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.