
கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவீக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பல பாடசாலைகளில் மாணவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கண் நோய் அறிகுறிகள் இருக்குமாக இருந்தால் மாணவர்களை வீட்டில் இருக்க அனுமதிக்குமாறு கல்வி அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கண் நோய் ஒருவரில் இருந்து ஒருவருக்கு பரவக் கூடியது என்பதனால் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கண்களில் வலி, கண் சிவத்தல், கண்களில் கண்ணீர் வடிதல் ஆகியன இந்த நோய்க்கான அறிகுறியெனவும், இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மற்றவரில் இருந்து விலகி இருப்பதன் மூலம் மற்றையவருக்கு இது பரவுவதை தடுக்க முடியும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.