
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நீதிபதி உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் முழுமையான நீதிவிசாரணையை நடத்த வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சிகள் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.