
File Photo
நாங்கள் சொல்வதை கேட்காது தவறான தீர்மானங்களை எடுத்து அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் வரவு செலவுத் திட்டத்தின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு வேண்டியவாறு எதனையும் செய்ய இடமளிக்க முடியாது. அரசாங்கம் செய்யும் அனைத்தும் எமது கட்சியின் மீதே வந்துவிழும். நாங்கள் கூறுவதை கேட்காது, அமைச்சரவையும் அரசாங்கமும் தவறான பாதையில் செல்லுமாக இருந்தால் அதற்கு இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொருட்களின் விலையேற்றங்கள் தொடர்பில் நாங்கள் ஜனாதிபதியுடனும் அமைச்சரவையுடனும் கலந்துரையாடியுள்ளோம். நாட்டில் பொருளாதார பிரச்சினை உள்ளது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமாக இருந்தால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது அமைச்சர்கள் அளவுக்கு மீறி மக்கள் மீது சுமைகளை சுமத்த முயன்றால் எங்களுக்கு தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்று ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.