April 11, 2025 6:21:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக கப்பல் சேவையை ஒத்தி வைக்கக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி கப்பல், தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளதுது. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.