இலங்கையில் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடைகள் அனைத்தையும் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையால் 2020 முதல் அரசாங்கம் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலைமை கடந்த ஆண்டு நவம்பர் வரை தொடர்ந்ததுடன் பின்னர், பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டதுடன், தற்போது அனைத்து பொருட்களுக்கும் தளர்வுகளை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.