இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் என்டனி காலமானார்.
படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் சென்றிருந்த போது வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் என்டனி, இன்று (09) அதிகாலை தனது 65ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் என பல்வேறு திறமைகளை இவர் கொண்ட இவர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.