தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி கப்பல், தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளதுது. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.