தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணிகளை மக்களிடம் கையளிக்குமாறும், மகாவலி என்ற பெயரில் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சபைக்கு நடுவில் சபாபீடத்திற்கு முன்னால் வந்து இவர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.