May 4, 2025 11:45:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விலைகள் மேலும் உயர்வு!

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இலங்கை லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று லிட்டோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3470 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.