February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிகழ்நிலை காப்பு’ சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்குமாறு கோரி ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன், பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை குறித்த சட்டமூலம் மீறுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரியுள்ளார்.