‘நிகழ்நிலை காப்பு’ சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் ஊடாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து இணைய செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை அமுல்படுத்த இந்த சட்டமூலத்தினூடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும் இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்தசில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடைசெய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நிகழ்வுபற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்”