January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் விசாரணை நடத்த சீஐடிக்கு உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சீஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சட்டமா அதிபரை சந்திக்கவும் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் நீதிபதி பதவி விலகியமை குறித்து முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சீஐடிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.