உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இன்று முதல் 10ஆம் திகதி வரையில் நான்கு நாட்களுக்கு குறித்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து அது தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் அதற்கான நிதி ஒதுக்காமையால் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக ஜே.வி.பியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுக்கள் கடந்த ஜுலை 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அதன் விசாரணைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.