January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சரத் வீரசேகர ஜனாதிபதி வேட்பாளரா?

ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய சக்தி மன்றம் என்ற அமைப்பன் ஊடாக அவர் வேட்பாளராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அமைப்பின் ஊடாக வேட்பாளராவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுவதுடன், இதற்கான பிரசார நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் சிறிய கட்சியொன்றின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.