November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குடிநீர் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், முள்ளுகரண்டிகள், நீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இவ்வாறாக தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடைகளை மீறி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.