January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனிதச்சங்கிலி போராட்டம்: தமிழ்க் கட்சிகள் முடிவு!

File Photo

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் போராட்டங்களை முன்னெனடுப்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி,ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.